நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'செயல்கள் அனைத்தும் எண்ணத்தைக் கொண்டே அமைகின்றன. ஒவ்வொர...
ஸஹீஹானது-சரியானது
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அனைத்து செயற்பாடுகளும் நிய்யத்தைக் கொண்டே கணிக்கப்ப்படுவதாக தெளிவுபடுத்துகிறார்கள். இந்த சட்டமானது வண...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : 'யார் எம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத புதிய விடயம் ஒன்றை உருவா...
ஸஹீஹானது-சரியானது
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் இந்த மார்க்கத்தில் புதிதாக ஒரு காரியத்தை கண்டுபிடித்து உருவாக்குகிறாரோ அல்லது அல்குர்ஆனும், அஸ்ஸ...
உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : ஒரு நாள் நாங்கள் எல்லோரும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது வெண்ணிற ஆடையும், கர...
ஸஹீஹானது-சரியானது
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யாருக்கும் அறிமுகமில்லாத ஒரு மனிதரின் தோற்றத்தில் ஸஹாபாக்களிடம் வருகை தந்தார் என உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யா...
ஸஹீஹானது-சரியானது
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

ஜந்து தூண்களை தாங்கி நிற்கும் பலமான ஒரு கட்டடத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை ஒப்பிட்டார்கள். இஸ்லாத்தின் எஞ்சிய பண்புகள் யாவும...
முஆத் இப்னு ஜபல்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னால் 'உஃபைர்' என்று அழைக்கப்படும் கழுத...
ஸஹீஹானது-சரியானது
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

நபி ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றியும் அல்லாஹ் அடியார்களுக்குச்செய்ய வேண்டிய கடமை குறித்தும் இந்...

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அனைத்து செயற்பாடுகளும் நிய்யத்தைக் கொண்டே கணிக்கப்ப்படுவதாக தெளிவுபடுத்துகிறார்கள். இந்த சட்டமானது வணக்கங்கள் நடைமுறை சார்ந்த விடயங்கள் அனைத்திற்கும் பொதுவானது. யார் தனது செயற்பாட்டினூடாக உலகியல் நலனை நாடினால் அவர் அதை மாத்திரமே அடைந்துகொள்வார். அவருக்கு எந்த கூலியும் கிடையாது. யார் தனது செயற்பாடுகளினூடாக அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறரோ, அவரின் அந்த செயலுக்கு வெகுமதியும் கூலியும் கிடைக்கும். குறிப்பிட்ட அந்த செயல் குடித்தல் சாப்பிடுதல் போன்ற அன்றாட செயல்களாக இருந்தாலும் சரியே. வெளிப்படையில் குறித்த செயலானது ஒரே மாதிரியாக இருந்தாலும் நிய்யத் -எண்ணமானது எந்தளவிற்கு தாக்கம் செலுத்துகிறது என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு உதாரணத்தைக் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் குறிப்பிடுகையில் யார் அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரமே நாடி தனது தாயகத்தை துறந்து (ஹிஜ்ரத்) செல்கிறரோ அவரின் ஹிஜ்ரத் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹிஜ்ரத்தாகும். அவரின் உண்மையான நிய்யத்திற்கு கூலி வழங்கப்படும். யார் தனது ஹிஜ்ரத்தின் போது உலகியல் நலன்களான செல்வம், அல்லது புகழ் அல்லது வியாபாரம் அல்லது மனைவி போன்ற விடயங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் சென்றிருந்தால் அவரின் நிய்யத்தில் (எண்ணத்தில்) அவர் அடைந்து கொள்ள விரும்பும் நலனைத் தவிர வேறு எதனையும் அடைந்து கொள்ளமாட்டார். அவருக்கு எந்த வெகுமதியோ கூலியோ கிடைக்காது என நபியவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
Hadeeth details

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் இந்த மார்க்கத்தில் புதிதாக ஒரு காரியத்தை கண்டுபிடித்து உருவாக்குகிறாரோ அல்லது அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் காட்டித்தராத ஒரு செயலைச் செய்கிறாரோ அது நிராகரிக்கப் படுவதோடு அல்லாஹ்விடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெளிவு படுத்துகிறார்கள்.
Hadeeth details

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யாருக்கும் அறிமுகமில்லாத ஒரு மனிதரின் தோற்றத்தில் ஸஹாபாக்களிடம் வருகை தந்தார் என உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள். அவரின் ஆடை கடுமையான வெண்மையும், தலை முடி கடுமையான கரு நிறமும் கொண்டதாக இருந்தது. அத்துடன் பயணம்செய்தவரிடம் காணப்படும் களைப்பு, தூசுபடிதல், முடிபரந்திருத்தல், ஆடை அழுக்காக இருத்தல் போன்ற அடையாளங்கள் எதுவும் அவரிடம் தென்படவில்லை. நபியவர்களிடம் சமூகம் தந்து அமர்ந்திருந்தோர் யாரும் அவரை தெரிந்திருக்கவுமில்லை. வந்தவர் நேரே நபியவர்களிடம் சென்று மாணவன் ஒருவன் அமரும் முறையில் நபியவர்களிடம் அமர்ந்து இஸ்லாம் பற்றி வினவினார். அதற்கு நபியவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் ஏற்று சாட்சி கூறுதல், ஐவேளைத் தொழுகைகளை பேணித் தொழுதல், ஸகாத்தை உரியவர்களுக்கு வழங்குதல், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல், சக்தியுள்ளோர் ஹஜ்ஜை நிறைவேற்றல் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதே இஸ்லாம் எனப் பதிலளித்தார்கள். உடனே கேள்வி கேட்டவர் நீங்கள் உண்மை சொன்னீர்கள் எனக் கூறினார். தனக்குத் தெரியாததைக் குறித்து கேட்டுவிட்டு பின்னர் அதனை உண்மைப்படுத்துவது ஸஹாபாக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து ஈமான் குறித்து வினவினார். அதற்கு நபியர்கள் ஈமான் உள்ளடக்கியிருக்கும் ஆறு அம்சங்களையும் குறிப்பிட்டார்கள். முதாலாவது : அல்லாஹ்வின் இருப்பையும் அவனின் பண்புகளையும் விசுவாசித்தல், படைத்தல் போன்ற விடயத்தில் அவனை ஒருப்படுத்துதல், வணக்கத்தை அவனுக்கு மாத்திரம் செலுத்துதல். இரண்டாவது : ஒளியினால் படைக்கப்பட்டடுள்ள மலக்குகள் அல்லாஹ்வின் கண்ணியமிக்க அடியார்கள், அவர்கள் ஒரு போதும் அல்லாஹ்விற்கு மாறு செய்யமாட்டார்கள், அவனின் கட்டளைப்பிரகாரமே செயற்படுவர்கள் என்ற மலக்குமார்களை ஈமான் கொள்வது. மூன்றாவது : அல்லாஹ்வினால் இறைத்தூதர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களான அல் குர்ஆன் இன்ஜீல் தவ்ராத் போன்றவற்றை ஈமான் கொள்வது. நான்காவது : அல்லாஹ்விடமிருந்து அவ்வேதங்களையும் மார்க்கத்தையும் பெற்று அவற்றை எத்திவைத்த தூதுவர்களான நூஹ், இப்ராஹீம் மூஸா ஈஸா அலைஹிமுஸ்ஸலாம், இறுதித்தூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஆகியோரையும் ஏனைய நபிமார்களையும் விசுவாசித்தல். ஐந்தாவது : மறுமை நாளை ஈமான் கொள்வது, இதில் மரணத்திற்கு பின்னுள்ள மண்ணறை மறை வாழ்வையும், மனிதன் மரணத்தின் பின் விசாரிக்கப்பட்டு ஒன்றில் சுவர்க்கம் அல்லது நரகம் செல்வான் என்பதையும் இந்தப்பகுதி உள்ளடக்கியுள்ளது. ஆறாவது: அல்லாஹ் அவனின் முன்னறிவின் பிரகாரம் தீர்மானித்து விதித்த விதியை ஈமான் கொள்வது, இதில் அல்லாஹ் தான் முன்னறிவின் படி விதித்துள்ள விடயங்களையும், விதித்த அந்த விடயங்களில் ஆழ்ந்த நோக்கமுள்ளது என்பதையும், அது நிகழ்வதற்கு அவனின் நாட்டமும் தேவை என்பதையும், விதித்த விடயங்கள் யாவும் அவன் விதித்தபடி நடைபொறும் என்பதையும், இப்பிரபஞ்ஞத்தில் நிகழும் அனைத்து விடயங்களையும் பற்றிய முழுமையான அறிவு அல்லாஹ்விடத்தில் உள்ளது என்பதையும் இது உள்ளடக்கியுள்ளது. தொடர்ந்தும் அவர் இஹ்ஸான் குறித்து கேட்டார் அதற்கு நபியவர்கள் இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீ காண்பது போல் வணங்குவீராக. ஆக இந்த (நிலையை) அந்தஸ்தை எய்துகொள்ள முடியவில்லை என்றால் அல்லாஹ்வை அவன் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் வணங்குவீராக. இதில் முதலாவது நிலையானது நேரடியாகப் பார்த்தல் என்ற அந்தஸ்தையும் இரண்டாவது அவதானம் எனும் அந்தஸ்தையும் குறிக்கிறது. பின்னர் அவர் மறுமை நாள் எப்போது நிகழும்? என வினவினார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறுமை நாள் நிகழ்வது குறித்த அறிவை அல்லாஹ் மாத்திரமே பெற்றுள்ளான்.(தனதாக்கிக் கொண்டுள்ளான்) அவனின் படைப்புகளில் எவரும் அது குறித்து அறியமாட்டார்கள். கேள்விகேட்டவரும் கேட்கப் பட்டவரும் இதில் விதிவிலக்கானோர் அல்லர். அவர்களும் அதனை பற்றி அறியமாட்டார்கள் என தெளிவு படுத்தினார்கள். பின்னர் அவர் மறுமை நாளின் அடையாளங்கள் குறித்துக் கேட்டார். அதற்கு நபியவர்கள், அடிமைப் பெண்களும் அவர்களது பிள்ளைகளும் அதிகரித்தல், அல்லது பிள்ளைகள் தமது தாய்மார்களை அடிமைகளைப் போன்று நடத்துதல், ஆடு மேய்க்கக் கூடிய சாமான்ய வறியவர்களுக்கு இறுதிக் காலங்களில் வசதி ஏற்பட்டு மாடமாளிகைகளைக் கட்டுவதில் போட்டிபோட்டு, பெருமைப் பட்டுக்கொள்ளுதல் போன்றவை அதன் அடையாளங்களில் சில என நபியவர்கள் தெளிவு படுத்தினார்கள். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கேள்வி கேட்டவர் ஜிப்ரீல் என்றும் அவர் புனித இம்மார்க்கத்தை ஸஹாபாக்களுக்கு கற்றுத்தர வந்தார் எனவும் தெரிவித்தார்கள்.
Hadeeth details

ஜந்து தூண்களை தாங்கி நிற்கும் பலமான ஒரு கட்டடத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை ஒப்பிட்டார்கள். இஸ்லாத்தின் எஞ்சிய பண்புகள் யாவும் அக்கட்டடத்தை பரிபூரணப்படுத்தக்கூடிய விடயங்களாகும். இஸ்லாத்தின் தூண்களில் முதலாவதாக இரண்டு ஷஹாதா கலிமாக்கள் ஆகும். அவை 'உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் சாட்சியம் கூறுதல்' ஆகும். இவ்விரண்டு விடயங்களும் ஒரு தூணாகவே கணிக்கப்படும். இவை ஒன்றையொன்று ஒரு போதும் பிரிந்திருக்கமாட்டாது. இவ்வார்த்தையை ஒரு அடியான் நாவினால் மொழிந்து, அல்லாஹ்வின் ஏகத்துவத்தன்மையையையும், அவன் மாத்திரமே வணக்கவழிபாடுகள் செலுத்த தகுதியானவன் என்பதையும் ஏற்று அதன் அர்த்தத்தை அறிந்து, அதன்படி செயல்படல் அவசியமாகும். அத்துடன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தை விசுவாசித்து, அவரை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றல் அவசியமாகும். இரண்டாவது : தொழுகையை நிலைநாட்டுதல், இது இரு சாட்சியங்களுக்கு அடுத்து பிரதான தூணாகும். தினமும் கடமையான ஐவேளை தொழுகைகளான பஜ்ர், லுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகியவைகளை அதன் நிபந்தனைகள், ருகுன்கள் மற்றும் வாஜிபாத்துக்களைப் பேணி நிறைவேற்றுவதைக் குறிக்கும். மூன்றாவது : ஸகாத் வழங்குதல், இது பொருள் ரீதியான ஒரு வணக்கமாகும். ஷரீஆவில்-மார்க்கத்தில்- வரையறுக்கப்பட்ட அளவை அடைந்த செல்வங்கள் அiனைத்திலும் இது கடமையாவதோடு அதற்கு தகுதியானவர்களுக்கு கொடுத்திட வேண்டும். நான்காவது : ஹஜ் செய்தல், ஹஜ் என்பது அல்லாஹ்வுக்கு வழிப்படும் முகமாக மக்காவுக்கு சென்று கிரியைகளை நிறைவேற்றுவதைக் குறிக்கும். ஐந்தாவது : ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, பஜ்ர் உதயமாகியது முதல் சூரியன் மறையும் வரையில் அல்லாஹ்வுக்கு வழிப்படும் எண்ணத்துடன் உண்ணுதல் மற்றும் பருகுதல் மற்றும் நோன்பை முறிக்கும் காரியங்கள் அனைத்தையும் தவிர்த்தலை இது குறிக்கும்.
Hadeeth details

நபி ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றியும் அல்லாஹ் அடியார்களுக்குச்செய்ய வேண்டிய கடமை குறித்தும் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டிய -உரிமை –கடமை யாதெனில், அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இருக்கும் ஏகத்துவவாதிகளை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும். பின்னர் முஆத் அவர்கள் நபியவர்களை விளித்து அல்லாஹ்வின் தூதரே இந்தச் சிறப்பை அறிந்து மக்கள் மகிழ்ச்சியடைவதற்காக நான் அவர்களுக்கு இதனை அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் இதில் அவர்கள் (அடியார்கள்) நற்காரியங்களில் ஈடுபடாது இந்த விடயத்திலே உறுதியாக இருந்துவிடுவார்கள் என்ற அச்சத்தினால் இதனை மக்களிடம் கூறுவதை தடுத்தார்கள்.
Hadeeth details

முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாகனத்தின் மீது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின் அமர்ந்திருந்தார்கள் அப்போது நபியவர்கள் தான் கூறுப் போகும் விடயத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த 'முஆதே!' என மூன்று தடவை அழைத்தார்கள். ஓவ்வொரு தடவையும் நபியவர்கள் அழைக்கும் போதெல்லாம் அல்லாஹ்வின் தூதரே! அப்படியே ஆகட்டும், அல்லாஹ்வின் தூதரே உங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு கட்டுப்பட்டவனாக உள்ளேன். உங்களுக்கு கட்டுப்படுவதினால் நான் மகிழ்ச்சியை தேடுகிறேன் என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் ஒருவர் உண்மையாக வணங்கப்படத்தக்கவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லையென்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் பொய்யாக அல்லாமல் உள்ளத்தாள் உண்மைப் படுத்தியவராக சாட்சி கூறி அதே நிலமையில் மரணிக்கிறாரோ அவர் மீது நரகத்தை ஹராமாக்கி விடுகிறான் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறவே முஆத் ரழியல்லாஹு அன்ஹு; இந்த செய்தியை மக்களி டம் அவர்கள் மகிழ்ச்சியடையவும், நல்ல சுபச் செய்தியாக அமைந்துவிடவும் இதனை நான் அறிவிக்கட்டுமா எனக் கேட்டார்கள். நபியவர்கள் மக்கள் இதிலேயே நம்பிக்கொண்டு அலட்சியமாக இருந்து அவர்களின் அமல்களெல்லாம் குறைந்து விடும் என அஞ்சினார்கள். எனவே முஆத் அவர்களும் அறிவை மறைத்த குற்றத்திற்கு உட்பட்டு விடுவதைப் பயந்து தனது மரணத்திற்கு முன்தான் இந்த ஹதீஸை அவர்கள் கூறினார்கள்.
Hadeeth details

யார் தனது நாவினால் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' அதாவது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என மொழிந்து, அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தும் வணங்கத் தகுதியற்றவை என நிராகரித்து, ஏனைய மதங்களைத் தவிர்த்து இஸ்லாத்தை மாத்திரம் மார்க்கமாக ஏற்றுக்கொள்பவரின் உயிரும் உடமையும் முஸ்லிம்களுக்கு புனிதமாகும். அவனின் புறச்செயற்பாடுகளை மாத்திரமே கருத்திற் கொள்ள வேண்டும். எனவே அவனின் சொத்துக்களை பரிமுதல் செய்யவோ –அபகரிக்கவோ, அவனின் இரத்தத்தை ஓட்டவோ- கொலைசெய்யவோ முடியாது. ஆனால் இஸ்லாமிய சட்ட ஒழுங்குக்குட்பட்ட ஏதாவது ஒரு குற்றத்தை அல்லது பாவகாரியத்தை செய்துவிட்டால் அதற்கான தண்டனை நிறைவேற்றப்படும். மறுமை நாளில் அல்லாஹ் அவனை விசாரிப்பதை பொறுப்பேற்பான், அவன் உண்மையாளனாக இருந்தால் அதற்கு வெகுமதி வழங்குவதோடு, அவன் நயவஞ்சகனான இருந்தால் அவனிற்கு வேதனையளிப்பான்.
Hadeeth details

இந்த ஹதீஸில் நபியவர்களிடம் ஒரு மனிதர் வந்து சுவர்கத்திலும் நரகத்திலும் நுழைவிக்க்கக் கூடிய இரு விடயங்கள் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காது அவனை மாத்திரமே வணங்கும் நிலையில் மரணிப்பது சுவர்க்கத்தை விதியாக்கும் விடயம் என்றும் 'ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு நிகராக அவனது உலூஹிய்யா (வணங்கி வழிபடுவதற்கு தகுதியானவன்) எனும் பண்பில் இணைகற்பிப்பித்து அல்லது அவனது ருபூபிய்யா என்ற பண்பில் (படைத்தல், பரிபாலித்தல், திட்டமிடுதல் போன்ற பண்புகளில் தனித்துவமானவன்) இணைகற்பித்து அல்லது அவனது திருநாமங்கள் மற்றும் அவனது அழகிய பண்புகளிலும் இணைகற்பித்து, மற்றும் ஏனைய விடயங்களிலும் இணை கற்பித்த நிலையில் மரணிப்பது நரகத்தை விதியாக்கும் விடயம் என பதிலளித்தார்கள்.
Hadeeth details

அல்லாஹ்வுக்கென உரித்தான விடயங்களில் ஒன்றை பிற ஒன்றின் பால் யார் திருப்பி விடுகிறாறோ அதாவது அல்லாஹ் அல்லாதவரிடத்தில் பிரார்த்தித்தல், அல்லது உதவி கோரி வேண்டுதல் போன்ற விடயங்களை செய்த நிலையில் ஒருவர் மரணிப்பாராயின் அவர் நரக வாதிகளில் ஒருவராக கருதப்படுவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவரின் இறுதி முடிவு சுவர்க்கமாகும் என இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இத்தகவலுடன் மேலதிகமாக குறிப்பிடுகிறார்கள்.
Hadeeth details

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஆத் ரழியல்லாஹு அவர்களை யமன் நாட்டிற்கு அழைப்பாளராகவும், போதகராகவும் அனுப்பும் போது அவர் கிறிஸ்தவ சமூகத்தை சந்திக்கப் போவதையும், அதனால் அதற்குரிய ஆயத்தங்களுடன் செல்ல வேண்டும் என்பதையும் தனது அழைப்புப் பணியில் முக்கியமானவற்றில் ஆரம்பித்து தனது பிரச்சாரப்பணியை ஆரம்பிக்க வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தினார்கள். அந்த வகையில் முதலில் 'உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சி கூறுதல் எனும்; நம்பிக்கையைச் சரிபடுத்தலின் பால் அழைக்க வேண்டும். இதன் மூலம்தான் அவர்கள் இஸ்லாத்தினுள் நுழைவார். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களுக்கு தொழுகையை நிலைநாட்டுமாறு கட்டளையிட வேண்டும். ஏனெனில் ஒரிறைக் கொள்கையை ஏற்றதன் பின்னுள்ள மிகப்பெரும் கடமையாக தொழுகை காணப்படுகிறது. தொழுகையை அவர்கள் நிலைநாட்டினால் அவர்களில் உள்ள செல்வந்தர்களகள் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கு ஸகாத் வழங்க வேண்டும் என பணிக்க வேண்டும். பின்னர் நபியவர்கள் அவர்களிடம் காணப்படும் விலையுயர்ந்த பொருள்களை ஸகாத்தாக பெறுவதை எச்சரித்தார்கள். ஏனெனில் ஸகாத் நடுத்தரமான பொருளிலிருந்தே பெறுதல் கடமையாகும். பின் அநியாயம் இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதினால் அவருக்கெதிராக பிரார்த்திக்கக் கூடாது என்பதற்காக அநியாயம் இழைப்பதை தவிர்ந்து கொள்ளுமாறு உபதேசம் செய்தார்கள்
Hadeeth details

மறுமை நாளில், மக்களில் நபியவர்களின் பரிந்துரைக்கு மிக தகுதியானவர் 'தனது உள்ளத்தினால் மிகத்தூய்மையான எண்ணத்துடன் லாஇலாஹ இல்லல்லாஹ் (உண்மையாக வணங்கப்படத் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,) என்று கூறுபவரே என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள். 'லாஇலாஹ இல்லல்லாஹ், என்பது (உண்மையாக வணங்கப்படத் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்ற கருத்தைக் குறிக்கும். அத்துடன் ஷிர்க் மற்றும் முகஸ்துதி ஆகியவற்றை விட்டு நீங்கியவராக இருத்தல் வேண்டும்.
Hadeeth details

ஈமான் பல கிளைகளையும், பண்புளையும் கொண்டது எனவும் அது செயற்பாடுகள், நம்பிக்கைகள் மற்றும் வார்த்தைகள் போன்றவற்றை உள்ளடக்கியது எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவரகள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஈமானின் பண்புகளில் மிகவும் உயர்ந்ததும் சிறப்புக்குரியதும் 'லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையாகும், அல்லாஹ் மாத்திரமே உண்மையான ஒரே கடவுளாவான், அவன் அனைத்து விடயங்களிலும் தனித்துவமானவன், வணங்கி வழிபட ஏனைய அனைத்தை விடவும் மிகத் தகுதியானவன் என பொருளறிந்து கூறி, அது கூறும் கருத்தின் அடிப்படையில் செயல்படுவதாகும். மனிதர்கள் செல்லும் பாதையில் அவர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடியவற்றை அகற்றி விடுவது ஈமானின் ஆகவும் குறைந்த –தாழ்ந்த- நிலையில் உள்ள செயற்படுகளில் ஒன்றாகும். அதனைத் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நாணம் -வெட்கம் ஈமானின் பண்புகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகிறார்கள், ஹயாஉ –நாணம்- என்பது அசிங்கமானதை கைவிட்டு அழகிய செயலை தூண்டும் ஒரு குணமாகும்.
Hadeeth details