'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணி...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது'
ஸஹீஹானது-சரியானது
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
விளக்கம்
ஜந்து தூண்களை தாங்கி நிற்கும் பலமான ஒரு கட்டடத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை ஒப்பிட்டார்கள். இஸ்லாத்தின் எஞ்சிய பண்புகள் யாவும் அக்கட்டடத்தை பரிபூரணப்படுத்தக்கூடிய விடயங்களாகும். இஸ்லாத்தின் தூண்களில் முதலாவதாக இரண்டு ஷஹாதா கலிமாக்கள் ஆகும். அவை 'உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் சாட்சியம் கூறுதல்' ஆகும். இவ்விரண்டு விடயங்களும் ஒரு தூணாகவே கணிக்கப்படும். இவை ஒன்றையொன்று ஒரு போதும் பிரிந்திருக்கமாட்டாது. இவ்வார்த்தையை ஒரு அடியான் நாவினால் மொழிந்து, அல்லாஹ்வின் ஏகத்துவத்தன்மையையையும், அவன் மாத்திரமே வணக்கவழிபாடுகள் செலுத்த தகுதியானவன் என்பதையும் ஏற்று அதன் அர்த்தத்தை அறிந்து, அதன்படி செயல்படல் அவசியமாகும். அத்துடன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தை விசுவாசித்து, அவரை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றல் அவசியமாகும். இரண்டாவது : தொழுகையை நிலைநாட்டுதல், இது இரு சாட்சியங்களுக்கு அடுத்து பிரதான தூணாகும். தினமும் கடமையான ஐவேளை தொழுகைகளான பஜ்ர், லுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகியவைகளை அதன் நிபந்தனைகள், ருகுன்கள் மற்றும் வாஜிபாத்துக்களைப் பேணி நிறைவேற்றுவதைக் குறிக்கும். மூன்றாவது : ஸகாத் வழங்குதல், இது பொருள் ரீதியான ஒரு வணக்கமாகும். ஷரீஆவில்-மார்க்கத்தில்- வரையறுக்கப்பட்ட அளவை அடைந்த செல்வங்கள் அiனைத்திலும் இது கடமையாவதோடு அதற்கு தகுதியானவர்களுக்கு கொடுத்திட வேண்டும். நான்காவது : ஹஜ் செய்தல், ஹஜ் என்பது அல்லாஹ்வுக்கு வழிப்படும் முகமாக மக்காவுக்கு சென்று கிரியைகளை நிறைவேற்றுவதைக் குறிக்கும். ஐந்தாவது : ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, பஜ்ர் உதயமாகியது முதல் சூரியன் மறையும் வரையில் அல்லாஹ்வுக்கு வழிப்படும் எண்ணத்துடன் உண்ணுதல் மற்றும் பருகுதல் மற்றும் நோன்பை முறிக்கும் காரியங்கள் அனைத்தையும் தவிர்த்தலை இது குறிக்கும்.
Hadeeth benefits
இரு சாட்சியங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது, அவ்விரண்டையும் சேர்த்தே ஏற்றுக்கொள்ள வேண்டும், இரண்டில் ஒன்று குறைந்தாலும் அது பயனளிக்காது. இதனடிப்படையில்தான் அவை இரண்டும் ஒரே தூணாக ஆக்கப்பட்டுள்ளது.
இரு சாட்சியங்களும் இஸ்லாத்தின் அடிப்படையாகும். அவைகளின்றி எந்த வார்த்தையும், செயலும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை.
Share
Use the QR code to easily share the message of Islam with others