பிறகு, (அரஃபாவில் தங்கிவிட்டு) மக்கள் புறப்படுகிற (அந்த) இடத்திலிருந்து புறப்படுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
[ஸூரா பகரா] • 199
ஆக, நீங்கள் உங்கள் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (மினாவில் தங்கி இருக்கும் நாட்களில் இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்தமிட்டுப் பெருமையாக) நினைவு கூர்ந்ததைப் போல அல்லது (அதைவிட) அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூருங்கள். ஆக, “எங்கள் இறைவா! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையில் தா!’’ என்று கூறுபவரும் மக்களில் உண்டு. ஆனால், அவருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமுமில்லை.
[ஸூரா பகரா] • 200
இன்னும், “எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் அழகியதைத் தா! மறுமையிலும் அழகியதைத் தா! (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்தும் எங்களைப் பாதுகாத்துக்கொள்’’ என்று கூறுபவரும் அவர்களில் உண்டு.
[ஸூரா பகரா] • 201
நிச்சயமாக மக்களுக்கு அமைக்கப்பட்ட முதல் இல்லம், (மக்கா என்றழைக்கப்படும்) ‘பக்கா’வில் உள்ளதாகும். அது பாக்கியமிக்கதும் (அதிகமான நன்மைகளை உடையதும்) அகிலத்தார்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் இருக்கிறது.
[ஸூரா ஆல இம்ரான்] • 96
கொழுத்த ஒட்டகங்கள், (மற்றும் மாடுகள்,) அவற்றை உங்களுக்கு அல்லாஹ்வின் (மார்க்க) அடையாள சின்னங்களில் நாம் ஆக்கி இருக்கிறோம். அவற்றில் உங்களுக்கு நன்மைகள் உண்டு. ஆகவே, அவை (ஒரு கால் கட்டப்பட்டு, மூன்று கால்கள் மீது) நின்றவையாக இருக்க அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூ(றி அ)றுங்கள். ஆக, (அவை அறுக்கப்பட்ட பின்) அவற்றின் விலாக்கள் (பூமியில்) சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து சாப்பிடுங்கள்; இன்னும், யாசிப்பவருக்கும் எதிர்பார்த்து வருபவருக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இவ்வாறே அவற்றை (-கால்நடைகளை) உங்களுக்கு பணிய வைத்தோம்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களிடம் அறிவித்தார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாட்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு காலம் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் ( விதித்தபடி) எழுது' என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாதிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) மேலும் உங்களில் ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் சொர்க்கவாதிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)
ஸஹீஹானது-சரியானது
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
உமர் இப்னு அபீ ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (அங்கும் இங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னிடம், 'சிறுவனே! நீ அல்லாஹ்வின் பெயரைக் கூறி, உனது வலது கரத்தால், உனக்கு முன்னால் இருப்பதை சாப்பிடு' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது'.
ஸஹீஹானது-சரியானது
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
ஸாலிம் இப்னு அபுல் ஜஃத் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் நான் தொழுது ஓய்வு பெற்றால் சிறப்பாயிருக்குமே! என்று கூற அங்கிருந்தவர்கள் இதனை குறையாகப் பார்த்தார்கள் இதற்கு அவர், தான் அல்லாஹ்வின் தூதர் கூறுவதை செவிமடுத்துள்ளேன். பிலாலே தொழுகைகாக இகாமத் கூறுவீராக! அதன் மூலம் எமக்கு ஆறுதல் அளிப்பீராக என்றார்கள்.
ஸஹீஹானது-சரியானது
இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நற் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்.
ஸஹீஹானது-சரியானது
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'தர்மத்தினால் செல்வம் குறைந்து விடுவதில்லை, மன்னிக்கும் அடியானின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதில்லை, அல்லாஹ்வுக்காக பணிந்து நடப்பவனை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை'.