'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்லது 'அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்ற...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழில்லாஹு அறிவித்துள்ளார்கள் : 'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்லது 'அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்'.
ஸஹீஹானது-சரியானது
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது
விளக்கம்
ஈமான் பல கிளைகளையும், பண்புளையும் கொண்டது எனவும் அது செயற்பாடுகள், நம்பிக்கைகள் மற்றும் வார்த்தைகள் போன்றவற்றை உள்ளடக்கியது எனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவரகள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.
ஈமானின் பண்புகளில் மிகவும் உயர்ந்ததும் சிறப்புக்குரியதும் 'லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையாகும், அல்லாஹ் மாத்திரமே உண்மையான ஒரே கடவுளாவான், அவன் அனைத்து விடயங்களிலும் தனித்துவமானவன், வணங்கி வழிபட ஏனைய அனைத்தை விடவும் மிகத் தகுதியானவன் என பொருளறிந்து கூறி, அது கூறும் கருத்தின் அடிப்படையில் செயல்படுவதாகும்.
மனிதர்கள் செல்லும் பாதையில் அவர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடியவற்றை அகற்றி விடுவது ஈமானின் ஆகவும் குறைந்த –தாழ்ந்த- நிலையில் உள்ள செயற்படுகளில் ஒன்றாகும்.
அதனைத் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நாணம் -வெட்கம் ஈமானின் பண்புகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகிறார்கள், ஹயாஉ –நாணம்- என்பது அசிங்கமானதை கைவிட்டு அழகிய செயலை தூண்டும் ஒரு குணமாகும்.
Hadeeth benefits
ஈமான் பல படித்தரங்களை கொண்டதாகும் , அவற்றுள் சில மற்றும் சிலவற்றைவிடவும் மிகவும் சிறப்புக்குரியதாகும்.
ஈமான் ; சொல், செயல், நம்பிக்கை ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாகும்.
அல்லாஹ்விடம் நாணத்துடன்- வெட்கத்துடன் இருத்தல் என்பது அல்லாஹ் தடுத்த ஒருவிடயத்தில் உன்னை அவன் காணாமலும் உனக்கு அவன் ஏவியவற்றில் உன்னை அவன் காணக் கூடியவனாகவும் இருப்பதாகும்.
இங்கே எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருப்பது அந்த எண்ணிக்கையுடன் வரையறுக்க்கப்பட்டதல்ல, மாறாக ஈமானின் செயற்பாடுகள் அதிம் என்பதையே இது காட்டுகிறது. ஏனெனில் அறபுகளைப் பொறுத்தவரை ஒரு குறித்த விடயத்திற்கு எண்ணிக்கை குறிப்பிட்டாலும் அதனை விட அதிகரிப்பதை அவர்கள் மறுப்பதில்லை.
Share
Use the QR code to easily share the message of Islam with others