{பிறகு, (அரஃபாவில் தங்கிவிட்டு) மக்கள் புறப்படுகிற (அந்த) இடத்திலிருந்து புறப்படுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.} (ஸூரா பகரா
: 199).
{ஆக, நீங்கள் உங்கள் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (மினாவில் தங்கி இருக்கும் நாட்களில் இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்தமிட்டுப் பெருமையாக) நினைவு கூர்ந்ததைப் போல அல்லது (அதைவிட) அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூருங்கள். ஆக, “எங்கள் இறைவா! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையில் தா!’’ என்று கூறுபவரும் மக்களில் உண்டு. ஆனால், அவருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமுமில்லை.} (ஸூரா பகரா
: 200).
{கொழுத்த ஒட்டகங்கள், (மற்றும் மாடுகள்,) அவற்றை உங்களுக்கு அல்லாஹ்வின் (மார்க்க) அடையாள சின்னங்களில் நாம் ஆக்கி இருக்கிறோம். அவற்றில் உங்களுக்கு நன்மைகள் உண்டு. ஆகவே, அவை (ஒரு கால் கட்டப்பட்டு, மூன்று கால்கள் மீது) நின்றவையாக இருக்க அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூ(றி அ)றுங்கள். ஆக, (அவை அறுக்கப்பட்ட பின்) அவற்றின் விலாக்கள் (பூமியில்) சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து சாப்பிடுங்கள்; இன்னும், யாசிப்பவருக்கும் எதிர்பார்த்து வருபவருக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இவ்வாறே அவற்றை (-கால்நடைகளை) உங்களுக்கு பணிய வைத்தோம்.} (ஸூரா ஹஜ்
: 36).