அதற்கு நபியவர்கள் யார் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காது மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். யார் அல்லாஹ்வுக்கு ஏதாவது ஒன்றை இணைவைத்தவராக மரணிக்கிறாரோ அவர் நரகம் நுழைவார் என்று கூறினார்கள்...
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! சுவர்கத்தையும் நரகத்தையும் விதியாக்கும் இரு விடயங்கள் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் யார் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காது மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். யார் அல்லாஹ்வுக்கு ஏதாவது ஒன்றை இணைவைத்தவராக மரணிக்கிறாரோ அவர் நரகம் நுழைவார் என்று கூறினார்கள்.
ஸஹீஹானது-சரியானது
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
விளக்கம்
இந்த ஹதீஸில் நபியவர்களிடம் ஒரு மனிதர் வந்து சுவர்கத்திலும் நரகத்திலும் நுழைவிக்க்கக் கூடிய இரு விடயங்கள் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காது அவனை மாத்திரமே வணங்கும் நிலையில் மரணிப்பது சுவர்க்கத்தை விதியாக்கும் விடயம் என்றும் 'ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு நிகராக அவனது உலூஹிய்யா (வணங்கி வழிபடுவதற்கு தகுதியானவன்) எனும் பண்பில் இணைகற்பிப்பித்து அல்லது அவனது ருபூபிய்யா என்ற பண்பில் (படைத்தல், பரிபாலித்தல், திட்டமிடுதல் போன்ற பண்புகளில் தனித்துவமானவன்) இணைகற்பித்து அல்லது அவனது திருநாமங்கள் மற்றும் அவனது அழகிய பண்புகளிலும் இணைகற்பித்து, மற்றும் ஏனைய விடயங்களிலும் இணை கற்பித்த நிலையில் மரணிப்பது நரகத்தை விதியாக்கும் விடயம் என பதிலளித்தார்கள்.
Hadeeth benefits
தவ்ஹீதின் -ஏகத்துவத்தின் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல். அதாவது யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காது அல்லாஹ்வை உறுதியாக நம்பிய முஃமினாக மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்.
இணைவைத்தலின் பயங்கர விளைவு. அதாவது அல்லாஹ்வுக்கு ஏதாவது ஒன்றை இணைவைத்த நிலையில் மரணித்தால் அவர் நரகம் நுழைவார்.
அல்லாஹ்வை ஏற்றுவாழ்ந்த பாவிகளான ஏகத்துவாதிகளின் விவகாரம் அல்லாஹ்வின் நாட்டத்தின் பால் உள்ள ஒரு விடயமாகும். அல்லாஹ் நாடினால் அவர்களை தண்டிக்கவோ அல்லது அவர்களை மன்னிக்கவோ முடியும். ஆனால் இறுதியாக அவர்கள் செல்லுமிடம் சுவர்கமாகும்.
Share
Use the QR code to easily share the message of Islam with others